அஷ்ரப் நகர் காணிகளை ஆளுநர் ஹிஸ்புல்லா மக்களுக்கு உடன் வழங்க வேண்டும்

0

ஒலுவில் அஸ்ரப் நகர் காணிகளை இராணுவம் விடுவித்து மாதமொன்று கடந்த நிலையிலும் அம் மக்களுக்கு இன்னும் காணிகள் கைவசம் கிடைக்கவி்ல்லை என மனித உரிமைகள் மற்றும் நீதியை பாதுகாக்கும் சமாதான நீதவான்கள் பேரவை இலங்கை பணிப்பாளர் பஹத் ஏ.மஜீத் தெரிவித்துள்ளார்,

இன்று புதிய குரலுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இதனை அவர் தெரிவித்துள்ளார், மேலும் கருத்துக்களை கூறிய அவர்.

முஸ்லிம் ஆளுநர் என்ற பெயரளவு அதிகாரம் இருக்கிறதே தவிர இங்கு ஒரு விடயமும் நடைபெறுவதற்ககான சாத்தியமில்லை,

முஸ்லிம்களுக்கான உரிமைகளை யாராலம் மீட்டுக்கொடுக்க முடியாது இது உறுதியான விடயம், யார் அதிகாரத்திற்கு வந்தாலும் இது நடைபெறாது, மாறாக தமிழ் மக்களுக்கான உரிமைகளை தமிழ் அரசியல் தலைவர்கள் பெற்றுக்கொடுக்கிறார்கள். இதற்கான காரணம் அவர்களின் மூலமான சர்வதேச தலையீடு மற்றும் உறுதியான கொள்கை, அண்மையில் அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேச அஸ்ரப் காணிகளில் இருந்து இராணுவம் தாமாக வெளியேறி அக்காணிகளை கிழக்கு ஆளுநரிடம் ஒப்படைத்தது, ஆனால் இன்று அவைகள் மக்களுக்கு கிடைக்கவில்லை, ஏன்  இவை இன்றும் கிடைக்கப்பெறவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது.

இந்த மக்கள் பல பேராட்டங்களை செய்தனர், ஊடகங்களிலும் இவர்களின் குரல்கள் ஒலித்தன ஆனாலும் தீர்வில்லை, இந்த பகுதியினை வன இலாகா கேட்கின்றனர், இராணுவம் இருந்த இடத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இவைகளின் அடிஆழம் என்பது பாமரனுக்கும் புரியும். இப்படியிருக்கையில் ஆளுநர் ஹிஸ்புல்லா இந்த காணிகளை வழங்குவாரா அதற்கு மத்திய அரசு இடம் கொடுக்குமா என்பதில் பாரிய கேள்வி எனக்கிருக்கிறது என்றார்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top