பேஸ்புக் ஊடாக சட்டவிரோதமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட கேளிக்கை நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஐந்து பெண்கள் உட்பட 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேகநபர்கள், நேற்று இரவு 9.30 அளவில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை தங்கல்லைப் பகுதியில் , கேளிக்கை விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றின் போதே, இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, குறித்த விடுதியில் இருந்து சுமார் 11 கிலோகிராம் கஞ்சா போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.
விடுதியின் உரிமையாளர் உட்பட 17 வயதிற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்ட சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், தங்கல்லை நீதிவானிடம் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில் ,மேலதிக விசாரணைகளை தங்கல்லை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றர்.
