பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதுஷ், துபாய் பொலிஸாரின் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.
மதுஷை இலங்கைக்கு நாடு கடத்துவது தொடர்பான துபாய் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திலக் மாரப்பன அண்மையில் அந்நாட்டுக்கு சென்றிருந்தார். அங்கு துபாய் வெளிவிவகார அமைச்சர் அன்வர் பின் மொஹமட்டுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது திலக் மாரப்பனவிடம் அவர் இதனை கூறியுள்ளார்.
இது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, துபாய் ஜனாதிபதிக்கு எழுதிய விசேட கடிதம் ஒன்றையும் திலக் மாரப்பன, துபாய் வெளிவிவகார அமைச்சரிடம் கையளித்துள்ளார்.
தன்னை நாடு கடத்துவதற்கு எதிராக மதுஷ் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்த பின்னர், துபாய் இந்த விடயம் தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

