நாடு முழுவதும் ஒருநாள் அடையாள பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் இந்த அடையாள பணிபகிஷ்கரிப்பு நாளை மறுதினம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.
வீதி விதிமீறல்களுக்கு குறைந்தபட்டமாக 25 ஆயிரம் ரூபா அபராதத்தை அறவிடும் வர்த்தமானி அறிவித்தல் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டது.
குறித்த அபராதம் உள்ளிட்ட சில காரணங்களை முன்னிறுத்தி இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தூரப்பிரதேசங்களுக்கு பயணிக்கு பஸ்களுக்கு ஒரே நிறத்தை அறிமுகப்படுத்தப்படுகின்றமைக்கும் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது

