தே.கை.அ. அதிகார சபையின் தலைவராக சிராஸ் மீராசாஹிப் கடமையேற்பு

0

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்ட முன்னாள் கல்முனை முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய பிரதி அமைப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப்  தனது கடமைகளை நேற்று முன்தினம் (15) நாரஹேன்பிட்டியிலுள்ள அதிகாரசபையின் தலைமைக் காரியாலயத்தில் பொறுப்பேற்றார். இந் நிகழ்வில், இராஜாங்க அமைச்சர்  அமீர் அலி, பிரதி அமைச்சர் அப்துல்லா மஃறூப், பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில்  உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்துள்ளவர்களின் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும்  இந்நிறுவனம், இலங்கையில் கைத்தொழில்களை ஊக்குவிப்பதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் தாபிக்கப்பட்டுள்ள முதன்மையான நிறுவனமாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
(ஏ.ஆர். பரீட்)
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top