இந்தியன் பாய் (ஹமீட்) மீது மீராவோடையில் கத்திக் குத்து!

0

(அபூ நமா)


வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை ஜும்ஆப் பள்ளிவாயல் பகுதியில்
கத்திக் குத்துச் சம்பவமொன்று நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

கடந்த சில நாட்களாக இரு நபர்களுக்கிடையில் தொழில் ரீதியான முரண்பாடு ஒன்று நிலவிவந்தது அந்த முரண்பாடு வலுப்பெற்றதைத் தொடர்ந்து இக் கத்திக் குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கத்திக் குத்துக்கு இலக்கான இந்தியன் பாய் என்று அழைக்கப்படும் மாஞ்சோலையைச் சேர்ந்த எம்.ஹமீட் பாய் (45) என்பவர் பலத்த காயங்களுடன் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தலைப் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்கான நபருக்கு இன்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top