இறக்காமம் சிறுவர் பூங்கா திறப்பு விழா

0

(அகமட் எஸ். முகைடீன்)

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு மற்றும் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சு ஆகியவற்றின் நிதி ஒதுக்கீடுகளில் நிர்மாணிக்கப்பட்ட இறக்காமம் சிறுவர் பூங்கா திறப்பு விழா நேற்று  (17) சனிக்கிழமை இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் ஏ.கே கலிலுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்து சிறுவர் பூங்காவினை சம்பிரதாய பூர்வமாக திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஸ்ரீயானி விஜேவிக்கிரம, இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம். நசீர், உதவி பிரதேச செயலாளர் சட்டத்தரணி நஹீஜா முசாபிர், இறகக்காமம் பிரதேச சபை செயலாளர் ஏ.எம். இர்பான், இறக்காம பிரதேச சபை முன்னாள் தவிசாளர் யு.கே. ஜபீர் மௌலவி, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா மற்றும் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர்கள், இப்பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 








Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top