நிலவும் மின்சார நெருக்கடிக்கு உண்மையான காரணம் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்தமை அல்ல கடந்த சில வருடங்களாக புதிய மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்காமையே என எரிசக்தி நிபுணர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.
சாம்பூர் மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்தின் விளைவையே தற்போது அனுபவித்து வருவதாக எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் நேற்றைய தினத்தை விட நூற்றுக்கு 7 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் 37 சதவீதமாக காணப்பட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் இன்றைய தினம் நூற்றுக்கு 30 சதவீதமாக குறைவடைந்துள்ளது.
காஸல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் இன்றைய தினம் 50 அடி வரை குறைந்துள்ளதால் அவற்றில் சிறிய தீவுகளும் உருவாகியுள்ளன.
இதனுடன் மின்சாரத் தடை, இந்நாட்டு பொருளாதார வளர்ச்சியில் பாரியளவு தாக்கம் செலுத்தியுள்ளதாக எரிசக்தி நிபுணர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

