சிறைச்சாலைகளுக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அதிகாரிகள் ஆகிய பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, சிறைச்சாலைகளுக்கான ஆண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஆயிரத்து 68 பேரும் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 110 பேரும் சேவையில் இணைத்து கொள்ளப்படவுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இரண்டாம் நிலை ஆண் மற்றும் பெண் சிறை அதிகாரிகள் பதவிக்காக 10 பேரும், மறுசீரமைப்பு உத்தியோகத்தர் பதவிக்காக மூன்று பெண் உத்தியோகத்தர்கள் அடங்கலாக 18 பேரும், இந்தச் சேவையில் இணைத்து கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத் தக்கது.

