பசில் ராஜபக்‌ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.

0

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்7 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, திவிநெகும திணைக்கள நிதியை மோசடி செய்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால்  முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு எதிராக, வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த வழக்கு மீதான விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க  முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே, குறித்த வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி வரை  ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top