இறக்காமம் பிரதேசத்தில் இன்று இறக்காமம் பிரதான வீதி காபட் செப்பனிடப்பட்டு வரும் நேரத்தில் காபட் ஏற்றி வந்த லாரி மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் விபத்துக்குள்ளாகியது. இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு நபர்களும் மயிரிழையில் உயிர் பிழைத்தனர்.
இவ்வீதியானது பல வருட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இவ்வீதி கட்டம் கட்டமாக செப்பனிடப்பட்டு வருகிறது அந்த வகையில் குறித்த வீதிக்கு சரியான ஒரு பாதுகாப்பு அற்ற ஒரு முறையில் எச்சரிக்கை பலகை இல்லாமல் இவ் வீதி செப்பனிடப்பட்டு வருவதாகவும் இதனால் இன்னம் பல விபத்த்துக்கள் இடம்பெறக் கூடும் எனவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.



