ஐக்கிய காங்கிரஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இலங்கையின் இறையாண்மையையும், நில உரிமையையும் சவாலுக்குட்படுத்தும் வகையில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் சமீபத்தில் கச்சதீவை இந்தியாவுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்திருப்பது அரசியல் ரீதியாக ஆபத்தானதும், பிராந்திய ஒற்றுமைக்கு கேடு விளைவிப்பதும் என எமது ஐக்கிய காங்கிரஸ் கட்சி தீவிரமாகக் கண்டிக்கிறது.
வரலாற்று உண்மைகள்
- கச்சதீவு தீவு முழுமையாக இலங்கைக்கு சொந்தமானது என்பதை இந்திய அரசாங்கமே அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.
- இந்திய மீனவர்கள் அங்கு நிலம் கோர முடியாது; சில சமயங்களில் மத நிகழ்வுகளில் பங்கேற்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
- 1976ஆம் ஆண்டு கூடுதல் ஒப்பந்தம் மூலம் இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி செய்யும் உரிமையும் தடை செய்யப்பட்டது.
இதனால், சர்வதேச சட்ட ரீதியாகவும், அரசியல் ஒப்பந்த ரீதியாகவும் கச்சதீவு இலங்கையின் பிரிக்க முடியாத நிலப்பகுதி என்பதை யாரும் மறுக்க முடியாது.
விஜயின் அரசியல் நாடகம்
இலங்கையில் பொருளாதார சவால்கள், சமூக பிரச்சினைகள், அரசியல் நிலைத்தன்மை ஆகியவை குறித்து நாம் போராடிக்கொண்டிருக்கும்போது, வெளிநாட்டு அரசியல்வாதிகள் எமது நிலப்பரப்பை கேள்வி எழுப்புவது எமது நாட்டின் சுயாட்சியை அவமதிப்பதாகும்.
இலங்கையின் உறுதியான நிலைப்பாடு
எமது எச்சரிக்கை



