(சர்ஜுன் லாபீர்)
2005ம் ஆண்டு 13ம் இலக்க பாராளுமன்ற அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் கீழ் அனர்த்த சூழ் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி தேவைகள் தொடர்பாக சம்மாந்துறை பிரதேச மட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று(28) சம்ம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இவ் உயர்மட்டக் கூட்டத்தில் வெள்ள அனர்த்தம் ஒன்று ஏற்படும் போது அதற்குரிய உடனடி நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்வது பற்றியும்,நிவாரண ஏற்பாடுகள் பற்றியும்,தற்காலிக இடைத்தங்கள் முகாம்கள் அமைப்பது தொடர்பாகவும் இன்னும் பல முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.
இக் கூட்டத்திற்கு அம்பாறை மாவட்ட அன்ர்த்த முகாமைத்துவ சேவை பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ சி.எம் ரியாஸ் அவர்களினால் அனர்த்த முகாமைத்துவ முன்னாயுத்த விடயங்கள் மற்றும் அனர்த்த பாதுகாப்பு சம்மாந்தமாக பொறிமுறைகள் பற்றியும் தெளிவுபடுத்தினார்.
இந் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம் மாஹீர்,பிரதேச சபை உறுப்பினர்கள்,பிராந்திய நீர்பாசன திணைக்கள பொறியியலாளர் ஆர்.வேல்கஜன்,சம்மாந்துறை மின்சார சபை அத்தியட்சகர் ஏ.டி.எம் நிப்றாஸ்,சம்மாந்துறை பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோகதகர் ஏ.எம்.எம் நசீம்,திணைக்களங்களின் பிரதிநிதிகள்,கிராம சேவகர்கள் என பல்வேறுபட்ட திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.