பொத்துவில் பகுதியில் பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் ஒருவர்
உயிரிழந்துள்ளதாகவும்,
57பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களை அவசரமாக வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருவதாகவும் கூறப்படுகிறது.
கெப்பட்டிபொலவிலிருந்து அருகம் விரிகுடாவிற்கு சுற்றுலா
சென்ற பஸ் ஒன்றே இந்த விபத்தில் சிக்கியுள்ளது.
கோமாரி பகுதியில் உள்ள பாலத்தில்
மோதி பஸ் கவிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.