இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் முறையான ஒப்புதல் இல்லாமல் ரூபாய் 100 மில்லியன் மதிப்புள்ள ஏராளமான கையடக்கத் தொலைபேசிகளை கடத்த முயன்ற இரண்டு இலங்கையர்கள் இன்று (27) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கை சுங்கத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 24 மற்றும் 32 வயதான சந்தேகநபர்கள் இருவரும் க்ராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள்.இருவரும் டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள நிலையில் அவர்களது பொதிகளை சோதித்த அதிகாரிகள் 955 கையடக்கத் தொலைபேசிகளை கண்டுபிடித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன