குளியாப்பிட்டி – தும்மலசூரிய பகுதியில் உள்ள நிலபொல பாலத்திற்கு அருகில் பாடசாலை வேன் மற்றும் பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் இரு பாடசாலை மாணவர்கள் மற்றும் வேனின் சாரதி உயிரிழந்துள்ளதுடன் 13 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்