அம்பாறையில் இளம்பெண் கழுத்தறுத்து கொலை: காதலனும் தற்கொலை – பெற்றோருக்கு காயம்
அதிகாலை செய்தியாளர் அறிக்கையின்படி, மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்த அந்த இளைஞன், இளம்பெண்ணின் தாய் மற்றும் தந்தை ஆகியோரையும் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளான்.
காயமடைந்த தாயும் தந்தையும் தற்போது மஹஓய முதன்மை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட இளம்பெண், 22 வயதுடைய சரோஜா உதயங்கனி என அடையாளம் காணப்பட்டுள்ளார். கொலை செய்த இளைஞன், மொனராகலை பகுதியைச் சேர்ந்த 31 வயது நபராவார்.
பதியதலாவ பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

