மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பகீர் தகவல்

0

 


மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்கள் அனைவரும் இராணுவத்துடன் தொடர்பு பட்டவர்கள் என பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மன்னாரைச் சேர்ந்த கடற்தொழிலாளர்  கைது

சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார், சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்டவர்களை கைது செய்த நிலையில் நேற்று முன்தினம் (23) மேலும் ஒரு சந்தேக நபரை கைது செய்தனர்.

மன்னாரைச் சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கடற் தொழிலாளி குறித்த கொலை சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் வழக்கு விசாரணைக்காக வருகை தந்த இருவர் உயிரிழந்ததுடன், பெண் ஒருவர் உள்ளடங்களாக மேலும் இருவர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மேலும் குறித்த கொலை சம்பவத்தின் பிரதான சூத்தரதாரி வெளிநாடொன்றில் வசிப்பதுடன் இராணுவத்துடன் தொடர்புடையவர்களை வைத்து இந்த கொலைகளை அவர் செய்துள்ளமை தெரியவந்தள்ளது 






Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top