மஜீட். ARM
அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வழிகாட்டலின் கீழ் செயற்பட்டுவரும் அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் மற்றும் அவசரகால மீட்புக் குழுவின் ஏற்பாட்டில், சமூக நலனை முன்னிறுத்திய மாபெரும் மனிதாபிமான சிரமதானப் பணி நேற்று (07) சம்மாந்துறை காதி நீதிமன்றம் மற்றும் கலாச்சார மண்டபத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
உயிர்காப்புக் குழுவினருக்கான பயிற்சிப் பட்டறைகளை நடாத்துவதற்காகவும், அனர்த்த மீட்புக்குத் தேவையான அவசரகால உபகரணங்களை பாதுகாப்பாகப் சேமித்து வைப்பதற்காகவும் பிரதேச செயலகத்தினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ள இக்கலாச்சார மண்டப வளாகம் முழுமையான சிரமதானப் பணி மூலம் துப்புரவு செய்யப்பட்டது.
பொதுமக்கள் மற்றும் சமூக நலன்சார் செயற்பாடுகளுக்குப் பெரிதும் பயன்படும் இக்கலாச்சார மண்டபத்தை முழுமையாகச் சுத்தப்படுத்திச் சுகாதாரமான சூழலை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இப்பணியில், அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் மற்றும் அவசரகால மீட்புக் குழு தலைவர் பிரோஸ் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் மிகுந்த ஊக்கத்துடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் கலந்துகொண்டனர்.
அத்துடன், உயிர்காப்புக் குழுவினருக்கு முதலுதவிப் பயிற்ەசிகளை வழங்கிவரும் சிறப்பு வளவாளர் ரோகினி அவர்களும் இச்சிரமதானப் பணியில் தன்னார்வத்துடன் கலந்துகொண்டு ஏனையோருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். மேலும், அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவே இச்சிரமதானப் பணி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



.jpg)








