அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட மீட்புக் குழுவினருக்கான இரண்டாம் நாள் முதலுதவிப் பயிற்சி!

A. R. M. Majeed
0

 



மஜீட். ARM 


அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கீழ் இயங்கும் அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் மற்றும் அவசரகால மீட்புக் குழுவின் இரண்டாம் கட்ட பயிலுனர்களுக்கான இரண்டாம் நாள் முதலுதவி பயிற்சி இன்று (18) சம்மாந்துறை காதி நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள கலாசார மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.


​இப் பயிற்சியினை முதலுதவி பயிற்றுவிப்பாளர் K.T. ரோகினி அவர்கள் மிகவும் சிறப்பாக நடாத்தினார். இப்பயிற்சியின் போது அவசரகால அனர்த்தங்களின் போது செயற்படும் முறை, காயங்களுக்கு முதலுதவி வழங்குதல் மற்றும் எலும்பு முறிவுகளுக்குரிய உடனடி முதலுதவி சிகிச்சைகளை வழங்குவது தொடர்பிலான ஆழமான பயிற்சிகள் விரிவாக வழங்கப்பட்டன:


​அனர்த்த இடத்திற்குச் செல்வதற்கு முன்னர் மீட்புப் பணியாளர்களின் சொந்தப் பாதுகாப்பு மற்றும் சூழலின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், விபத்து ஏற்பட்ட இடத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை மதிப்பிடுதல் மற்றும் உடனடியாக அவசர உதவிகளை நாடும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.


​ காயம்பட்ட பகுதியில் இருந்து அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படுவதைத் தடுத்து சுத்தமான துணி அல்லது காசா பயன்படுத்தி அழுத்தமான கட்டுப்போடுதல் மற்றும் கிருமித்தொற்றுகள் ஏற்படாமல் காயத்தைச் சுத்தப்படுத்தும் முறைகள் விளக்கமளிக்கப்பட்டன.


​எலும்பு முறிவு ஏற்பட்ட பகுதியை மேலும் சேதமடையச் செய்யாமல் அசைவற்ற நிலையில் பேணுவது, ஸ்பிளிண்ட் அல்லது தகுந்த உபகரணங்களைப் பயன்படுத்தி முறிவு ஏற்பட்ட உறுப்புகளை நேராகப் பொருத்தி கட்டுப்போடும் முறைகள் மற்றும் நோயாளியை பாதுகாப்பாக மருத்துவமனைக்கு மாற்றும் வரை கையாள்வதற்கான நடைமுறை விளக்கங்கள் வழங்கப்பட்டன.


​இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் மற்றும் அவசரகால மீட்புக் குழுவின் நிர்வாகத்தினரான ஜமீன் பிரோஸ், ரிஷாட் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சிக்கான பூரண ஒத்துழைப்புக்களை வழங்கிச் சிறப்பித்தனர்.












Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top