விவசாய விஞ்ஞான அறிவுப்போட்டியில் மாகாண மட்டத்தில் முதலிடம்: தேசிய மட்டத்திற்குத் தெரிவானார் மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலய மாணவன் வி . நிருஸ்காந்!

A. R. M. Majeed
0

 




மஜீட். ARM 


சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலயத்தின் தரம் 11 மாணவனான வி . நிருஸ்காந், விவசாய விஞ்ஞான அறிவுப்போட்டியில் மாகாண மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.

​விவசாயத் துறையில் தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்தியுள்ள இம்மாணவன், மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று பாடசாலைக்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

​இந்த மகத்தான வெற்றிக்குப் பின்னால் அர்ப்பணிப்புடன் வழிகாட்டிய பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

தேசிய மட்டப் போட்டியிலும் நிருஸ்காந் அவர்கள் வெற்றிகண்டு மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.






Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top