மஜீட். ARM
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு முன்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடைபாதை அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக, சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு விடுத்த கோரிக்கைக்கிணங்க, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வீதி பராமரிப்பு மற்றும் முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆர்.எம்.பி.ரத்நாயக்க இன்று (06.08.2026) சம்மாந்துறைக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு கள ஆய்வு செய்தார்.
இதன்போது, தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நடபாதை அபிவிருத்திப் பணிகள் பார்வையிடப்பட்டதுடன், நடைபாதையை மேலும் விஸ்தரித்தல், மோட்டார் சைக்கிள்களுக்கான தனியான பாதையை அமைத்தல், எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள், ஹிஜ்றா சந்தி சுற்றுவட்ட அபிவிருத்தி மற்றும் ஹிஜ்றா சந்தியிலிருந்து அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி வரை வீதியை நான்கு வழிப்பாதையாக அபிவிருத்தி செய்வது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அக்கரைப்பற்று அலுவலகத்தின் பிரதம பொறியியலாளர் கே.எல்.எம். இஸ்மாயில், கல்முனை அலுவலகத்தின் நிறைவேற்று பொறியியலாளர் இசட்.ஏ.எம்.அஸ்மீர், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களான ஏ.எச்.எம்.காலித், எம்.ஆர். ஆஷிக் முஹம்மட், எம்.ஐ.எம்.றிஸ்வி கான், சம்மாந்துறை பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான எம்.எம்.எம்.முஸ்தபா, ரீ.ஸங்கீதன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

