எரிபொருள் தட்டுப்பாடு வருமா? - வெளியான அறிவிப்பு

0

 


எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.


நாளை ( 02) 32,000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் 8,000 மெற்றிக் தொன் விமான எரிபொருள் (Jet-A1) அடங்கிய கப்பல் இலங்கையை வந்தடையவுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 6-7 மற்றும் 7-8 ஆகிய திகதிகளில் மேலும் இரண்டு எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளன. ஏப்ரல் மாதத்தின் முதல் வாரங்களுக்குத் தேவையான எரிபொருள் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டிற்கு (Quota) அதிகமாக எரிபொருளை விநியோகிப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலத்தில் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலதிக எரிபொருள் கையிருப்பு இருப்பதால் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top