ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்று இஸ்ரேலின் மத்திய பகுதியில் இன்று அதிகாலை விழுந்து வெடித்துள்ளது.
கடந்த ஒரு மணி நேரத்திற்குள் இடம்பெற்ற இந்தத் தாக்குதலால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
ஈரானில் இருந்து ஏவுகணை ஏவப்பட்டதை ரேடார் கட்டமைப்பு கண்டறிந்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலிய பாதுகாப்புத் தரப்பினரால் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இஸ்ரேலின் மத்திய பகுதிகளை இலக்கு வைத்து வந்த இந்த ஏவுகணை, பிளெப்ராக் (Bnei Brak) நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த ஏவுகணை வான்பரப்பிலேயே இடைமறித்து அழிக்கப்பட்ட போதிலும், அது ஒரு 'கிளஸ்டர்' (Cluster-type) வகை வெடிச்சீராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, ஏவுகணையின் பாகங்கள் ஒரு பரந்த பரப்பளவில் சிதறி விழுந்துள்ளன.
இந்தச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் மற்றும் சேத விபரங்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகளில் பாதுகாப்புத் தரப்பினர் ஈடுபட்டு வருவதாக அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

