இஸ்ரேல் - ஈரானிற்கு இடையில் தீவிரமடையும் நேரடித் தாக்குதல்கள்: எழுப்பப்படும் அபாய எச்சரிக்கை ஒலிகள்

0

 இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நேரடித் துப்பாக்கிப் பிரயோகங்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக வடக்கு இஸ்ரேல், ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் ஆகிய பகுதிகளில் அபாய எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அண்டை நாடுகளின் வான்பரப்பு மற்றும் நிலப்பரப்பு தன் மீது தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்படாத வரை, பதற்றத்தைக் குறைக்கத் தாம் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்திருந்தது.

அமெரிக்கா தாக்குதல்

எனினும், வளைகுடா தளங்களிலிருந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால், அந்த வாய்ப்பைத் ஜனாதிபதி டிரம்ப் பாழாக்கிவிட்டதாக ஈரான் பின்னர் அறிவித்துள்ளது.

ஈரான் மீதான அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களுக்கு பிரித்தானியாவின் வான் படைத் தளங்களைப் பயன்படுத்தப் பிரதமர் சேர் கீர் ஸ்டார்மர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து, 24 ஏவுகணைகளைச் சுமந்து செல்லக்கூடிய அமெரிக்காவின் பிரம்மாண்டமான B-1 Lancer போர் வானூர்தி பிரித்தானியாவின் RAF Fairford தளத்தில் தரையிறங்கியுள்ளதாக தெரியவருகிறது.

இஸ்ரேல் - ஈரானிற்கு இடையில் தீவிரமடையும் நேரடித் தாக்குதல்கள்: எழுப்பப்படும் அபாய எச்சரிக்கை ஒலிகள் | Isrel Iran War Middle East Problem

இஸ்ரேலிய படைகளை குறிவைத்து தாக்குதல்

இதற்கிடையில், வடக்கு இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லைக்கு அருகில் உள்ள இஸ்ரேலியப் படைகளைக் குறிவைத்து இன்று தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது.

போர்நிறுத்தம் நடைமுறையில் உள்ள போதிலும், தெற்கு காசாவில் பாலஸ்தீனர்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. 

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top