மத்திய கிழக்கில் பதற்றம்: களநிலை யதார்தங்களை புரிந்து கொள்தல்!

0



கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி சர்வதேச சட்டங்களை மீறி அமெரிக்காவும் இஸ்ரேலும் அவற்றின் ஏகாதிபத்திய ஏகபோக நிகழ்ச்சி நிரலிற்கு ஏற்ப ஒருதலைப்பட்சமாக ஈரான் மீது திணித்து விட்ட போர் ஒரு மாத காலத்தை எட்டியுள்ள நிலையில் அதில் நேரடியாக பங்கு கொள்ளாத ஆனால் மறைமுகமான ஆதரவை வழங்கி சூழ்நிலை பணயக் கைதிகளாக, பகடைக் காய்களாக மாறிப் போயுள்ள அரபு வளைகுடா நாடுகளின் நிலை கவலைக்கிடமாக மாறிவிட்டுள்ளமை பகிரங்க இரகசியமாகும்!


சவுதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகள் ஏன் ஈரானை ஒரு அச்சுறுத்தலாக பார்க்கின்றன என்பதை  அறியாமல் தற்போதைய மத்திய கிழக்கு களநிலவரங்களை அதன் பல பரிமாணங்களிலும் புரிந்து கொள்ள முடியாது!


இது ஒரே காரணம் மட்டுமல்ல, பாதுகாப்பு, அரசியல், பொருளாதாரம், மற்றும் சிந்தனைக் கோணங்கள் அனைத்தும் இதில் உள்ளன.


1. பிராந்திய ஆதிக்கப் போட்டி

ஸவூதி அரேபியா மற்றும் ஈரான் இரண்டும் மத்திய கிழக்கில் முன்னணி சக்திகளாக இருக்க விரும்புகின்றன.

ஈரான்: புரட்சிகர அரசியல் அணுகுமுறை

சவுதி: நிலைத்தன்மை மற்றும் பாரம்பரிய ஆட்சி, இதனால் இரு தரப்பும் செல்வாக்கிற்கான போட்டியில் உள்ளன.


2. ஈரானின் கூட்டணிகள் மற்றும் ஆயுதக் குழுக்கள்:

ஈரான் பல நாடுகளில் தன்னுடன் இணைந்த அமைப்புகளை ஆதரிக்கிறது:

ஹிஸ்புல்லாஹ் – லெபனான்

ஹுதீஸ் இயக்கம் – யேமன்

ஈராக், சிரியா போன்ற நாடுகளில் மிலீஷாக்கள், வளைகுடா நாடுகள் இதை “சுற்றிவளைக்கும் செல்வாக்கு” என்று பார்க்கின்றன.


3. பாதுகாப்பு அச்சங்கள் (மிசைல் & ட்ரோன் தாக்குதல்கள்): 

கடந்த ஆண்டுகளில்:

எண்ணெய் நிலையங்கள் மீது தாக்குதல்கள்

ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள்

கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல்கள், இது வளைகுடா நாடுகளின் பொருளாதார பாதுகாப்பை நேரடியாக பாதிக்கிறது.


4. ஹோர்மூஸ் நீரிணை:

இந்த கடல் மார்க்கம் மிக முக்கியமானது:

உலக எண்ணெய் வர்த்தகத்தின் ஒரு பெரிய பகுதி இங்கே வழியாக செல்கிறது.

ஈரான் இதை கட்டுப்படுத்தும் அல்லது தடைசெய்யும் என்று கூறியுள்ள சூழல்கள் உள்ளன, இது வளைகுடா நாடுகளுக்கு உயிர்நாடி போன்றது.


5. மத & சிந்தனை வேறுபாடு:

ஈரான்: ஷியா இஸ்லாமிய குடியரசு

பெரும்பாலான வளைகுடா நாடுகள்: சுன்னி தலைமையிலானவை


1979 இஸ்லாமியப் புரட்சியின் பின், ஈரான் தனது சிந்தனையை வெளிநாடுகளுக்கு பரப்ப முயன்றது என்று கருதப்படுகிறது; இதனால் உள்நாட்டு ஸ்திரத்த்தன்மை பற்றிய அச்சம் உருவானது.


6. அணு திட்டம் பற்றிய கலக்கம்:

ஈரானின் அணு திட்டம் குறித்து:

அது ஆயுதமாக மாறுமா? என்ற சந்தேகம்.

பிராந்திய சக்தி சமநிலையை மாற்றுமா? என்ற பயம், இது நீண்டகால பாதுகாப்பு சவால்.


7. அமெரிக்கா – கூட்டணி காரணி

ஐக்கிய அமெரிக்கா வளைகுடா நாடுகளின் முக்கிய பாதுகாப்பு கூட்டாளி

ஈரான்: அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாடு, இது பிராந்திய அரசியல், புவியரசியல் முரண்பாடுகளை அதிகரிக்கிறது.


8. போர்க்களமாக மாறும் பயம்:

வளைகுடா நாடுகள் பெரும்பாலும் நேரடி போரைக் விரும்பவில்லை:


போர் நடந்தால் அவர்களின் நிலப்பரப்பு தாக்குதலுக்குள்ளாகலாம்

பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும், அதனால் இப்போது பல நாடுகள் பேச்சுவார்த்தை மற்றும் சமாதான அணுகுமுறையை ஆதரிக்கின்றன.


 ⚖️ முக்கிய உண்மை:

அனைத்து வளைகுடா நாடுகளும் ஒரே மாதிரி நினைக்கவில்லை:

* அதிக அச்சம்: சவுதி, அமீரகம், பஹ்ரைன்

* சமநிலை / நடுவர் நிலை: ஓமான், கட்டார்


🧭 முடிவு:

வளைகுடா நாடுகள் ஈரானை அச்சுறுத்தலாக பார்க்கும் முக்கிய காரணங்கள்:


* பிராந்திய ஆதிக்கப் போட்டி

* ஆயுதக் குழுக்கள் மூலம் செல்வாக்கு

* நேரடி பாதுகாப்பு அபாயங்கள்

* பொருளாதார பாதைகள் மீதான கட்டுப்பாடு

* மத மற்றும் அரசியல் வேறுபாடுகள்


ஆனால் தற்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலினால் ஈரான் மீது திணிக்கப்பட்டுள்ள போரிற்கு ஈரான் இடையறாது தரும் பதிலடிகள், மற்றும் சாதகமான புவியரசியல் காரணிகள்,  அரபு முஸ்லிம் உலகில் மேலோங்கியுள்ள இஸ்ரேல் மீதான வெறுப்பு, பிராந்தியத்தில் அமெரிக்க முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டமை, அமெரிக்கா வளைகுடா நாடுகளை கைவிட்டுள்ளமை  போன்ற காரணிகளால் எல்லா தரப்புக்களும் போர் அல்ல இராஜதந்திர அணுகுமுறை தான் நீண்டகால தீர்வு என்று உணர ஆரம்பித்துள்ளன, இதுவே ஈரான் அடைந்துள்ள மிகப் பெரும் வெற்றியாகும்!


உடனடிக் காரண காரியங்களுக்கு அப்பால் 1979 ஆம் ஆண்டு அமெரிக்க நேச அணியாக இருந்த ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சி முதல் இன்று வரையான ஐந்து தசாப்த காலமாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் சர்வதேச பிராந்திய நேச அணிகள் வலைப்பின்னலாக மேற்கொண்ட நேரடி மறைமுக புரொக்ஸி யுத்தங்கள், அரசியல் இராஜதந்திர நெருக்குவாரங்கள், பொருளாதார தடைகளை எல்லாம் தாண்டி தன்னை பூரணமாக தயார் நிலையில் வைத்திருந்த ஈரான் தற்போதைய களநிலவரங்களை எதிரிகளின் கட்டுப் பாட்டில் இருந்து கைநழுவச் செய்துள்ளமை குறிப்பிடத் தக்கது.


இந்நிலையில் தொடர்ந்தும் அமெரிக்க இஸ்ரேலிய நிகழ்ச்சி நிரலுடன் தம்மை பணயமாக பிணைத்து வைத்திருக்காது அரபு வளைகுடா நாடுகள் துருக்கி எகிப்து கத்தார் ஓமான் போன்ற நாடுகளின் மத்தியஸ்த முயற்சியில் ஈரானுடன் இராஜதந்திர பேச்சு வார்த்தைகளில் ஈடுபட வேண்டும், அதற்கு சாதகமான புவியரசியல் கள நிலவரங்களை கவனத்திற் கொள்தல் காலத்தின் கட்டாயமாகும்!


*மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்*

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top