அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபம மங்கள விக்ரமாராச்சி இன்று கடமையேற்பு!

0

 


✍️மஜீட். ARM 

​அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள அனுபம மங்கள விக்ரமாராச்சி (Anupama Mangala Wickramarachchi) அவர்கள், இன்று (12) காலை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.


​மாவட்டச் செயலகத்திற்கு வருகை தந்த புதிய அரசாங்க அதிபரை, மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் செயலக உயரதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒன்றிணைந்து உன்னதமான முறையில் வரவேற்றனர். 


அதனைத் தொடர்ந்து, மங்கல விளக்கேற்றப்பட்டு சமய வழிபாடுகள் இடம்பெற்றதுடன், சுப வேளையில் அவர் தனது கடமைப் பொறுப்புக்களுக்கான ஆவணத்தில் கையொப்பமிட்டார்.







Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top