இந்திய எண்ணெய்க் கப்பலான ‘ஹரி ஆனந்த்’, ஞாயிற்றுக்கிழமை (29) பிற்பகல் 1.30 மணிக்கு கொழும்புத் துறைமுகத்தின் டொல்பின் முனையத்தை வந்தடைந்தது.
துறைமுகங்கள் அமைச்சின் கூற்றுப்படி, இக்கப்பல் 18,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 18,000 மெட்ரிக் டன் ஒக்டேன் 92 ரக பெற்றோல் உட்பட மொத்தம் 36,000 மெட்ரிக் டன் எரிபொருளைக் கொண்டு வந்துள்ளது.
கப்பல் கொண்டு வந்துள்ள எரிபொருளை கொலன்னாவ எரிபொருள் சேமிப்பு வளாகத்திற்கு மாற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

