உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு விசேட ஏற்பாடு : விசேட தொலைபேசி எண்கள் வெளியீடு

0

 


உயர்தர பரீட்சை காலப்பகுதியில் அனர்த்தங்களினால் ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியன இணைந்து விசேட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன. 

 
சீரற்ற வானிலையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் காரணமான உயர்தர பரீட்சார்த்திகள் எதிர்கொள்ளும் இடையூறை தடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதன்படி, அனர்த்த சூழ்நிலை காரணமாக பரீட்சார்த்திகளுக்கு ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டால், 117 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அல்லது 1911 என்ற பரீட்சைகள் திணைக்களத்துக்கு அறிவிக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
அத்துடன், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர நடவடிக்கை பிரிவில் நிறுவப்பட்டுள்ள தேசிய பரீட்சை அவசர நடவடிக்கை பிரிவின் விசேட தொலைபேசி எண்களான 0113 668 026, 0113 668 032, 0113 668 087 மற்றும் 0113 668 119 ஆகிய தொலைபேசி எண்களுக்குத் தெரிவிப்பதன் மூலம் தேவையான ஒருங்கிணைப்பு உதவியைப் பெறலாம் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 
 
இதேவேளை, நாளை நாடளாவிய ரீதியில் உள்ள 2,362 பரீட்சை நிலையங்களில் உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top