அம்பாறை நகரில் ஹெராயின் கடத்திய நான்கு பேரை அம்பாறை ஊழல், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது.
கடந்த ஒரு மாதமாக, அம்பாறை ஊழல் தடுப்புப் பிரிவு பல போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்து அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நடவடிக்கையானது கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பொலிஸ் மா அதிபர் மற்றும் அம்பாறை மாவட்ட பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் அம்பாறை நகரில் மிகவும் மோசமாக போதைப்பொருட்களை விநியோகிப்பதாக அம்பாறை பிரிவு ஊழல் தடுப்புப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.
இந்த சோதனையின் போது கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களிடமிருந்து 32100 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை காவல்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
அம்பாறை பகுதியை சேர்ந்த 28, 34, 29, 35 ஆகிய வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நான்கு நபர்களையும் அம்பாறை தலைமை நீதவான் திருமதி சதுரிகா சண்டிலக முன்னிலையில் ஆஜர்படுத்திய பின்னர் குறித்த நான்கு சந்தேகநபர்களும் இம் மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

