இறக்காமம் அஸ்ரப் தேசிய பாடசாலை சமூக விஞ்ஞானப் போட்டியில் சாதனை

0

எஸ்.எம்.சன்சீர்

கடந்த ஆண்டு ( 2024) நடை பெற்ற அகில இலங்கை சமூக விஞ்ஞானப் போட்டியில் இறக்காமம் அஸ்ரப் தேசிய பாடசாலை மாணவர்கள் முறையே 3ஆம்,4ஆம் நிலைகளைக் பெற்று சாதனை பண்டைத்துள்ளனர்.


வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கான பதக்கங்களையும் சான்றிதழ்களையும் சம்மாந்துறை வலையக் கல்வி அலுவலகத்தின் உதவி கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.நிசார் அவர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலை சமூகம் மாணவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.




         கல்வி அமைச்சின் 2012/20ஆம் சுற்றுநிருபத்திற்கமைவாக மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞானப் பிரிவின் வழிநடாத்தலில் நாடுமுழுவதும் பரவலான வகையில்தமிழ்,சிங்களம்ஆகிய இரு மொழிகளிலும் நடாத்தப்படுகினறமை குறிப்பிடத் தக்கதாகும்.




          சமூக விஞ்ஞானப் பாடங்களாக வரலாறு, குடியியல், புவியியல் போன்ற பாடங்களோடுஇணைந்ததாகசமகாலத்தகவல்கள் தொடர்பாக ஆசிரியர்களையும்,மாணவர்களினதும்.ஈடுபாட்டைவிருத்தியடையச் செய்யும் நோக்கில் நாடாளவியரீதியில் நடைபெற்ற இப்போட்டியில் இறக்காமம் அஸ்ரப் தேசிய பாடசாலை மாணவர்களானA.W.பாத்திஃ,R.M.ஆயிஷா,M.K.M.யூசுப்சயான் ஆகிய மாணவர்கள் வெற்றி பெற்று பாடசாலைக்கு பெருமை பெற்றுத்தந்துள்ளனர்.




Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top