TELL IGP மற்றும் l-need சேவைகள் புதிய வடிவில்

0


TELL IGP மற்றும் l-need சேவையை புதிய முகத்தில் தொடங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களின் முறைப்பாடுகள், கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை நேரடியாக பொலிஸ்மா அதிபரிடம் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தலைமையில் பொலிஸ் தலைமையகத்தில் இன்று (06) இந்த சேவை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

TELL IGP சேவையின் ஊடாக பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டுவரப்பட வேண்டிய விடயங்கள், பொலிஸ் நிலையங்களில் விசாரணை செய்யப்படாத முறைப்பாடுகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் தவறுகள் குறித்து 24 மணி நேரமும் முறைப்பாடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கையடக்கதொலைபேசி தொலைந்து போனால் பொலிஸ் நிலையம் செல்லாமல் இணையவழி ஊடாக தொலைந்து போன கைப்பேசி தொடர்பான தகவல்களை வழங்கி முறைப்பாடு அளிக்கும் வசதியை I-need சேவை வழங்கியுள்ளது.

தொலைந்து போன கைப்பேசியை ஒருவர் பயன்படுத்தினால், முறைப்பாட்டாளருக்கு இந்த சேவையின் ஊடாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top