வரலாற்றுச் சிறப்புமிக்க சிகிரியா கோட்டையை சுற்றுலாப் பயணிகளுக்காக இரவு நேர விஜயத்திற்காக திறந்து வைப்பதாக வெளியான செய்திகளை புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மறுத்துள்ளது.
தற்போது சமூக ஊடகங்களில் பரப்பப்படும் இரவு நேரத்தில் விளக்குகளுடன் கூடிய சீகிரியாவின் படம் போலியானது என அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க சிகிரியா பாறைக் கோட்டையை நிலவு இரவுகளில் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்க சுற்றுலா அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்த தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பௌர்ணமி போயா தினத்தை இலக்காகக் கொண்டு மாதத்திற்கு ஐந்து நாட்களுக்கு ‘நிலவில் சிகிரியா’ என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சித் திட்டத்தின்படி, சிகிரியாவிற்கு சுற்றுலாப் பயணிகள் இரவு நேர வருகைக்கு அனுமதிக்கப்பட வேண்டும்; பௌர்ணமி தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரும், பௌர்ணமி தினத்தன்றும், இரண்டு நாட்களுக்குப் பின்னரும், சுற்றுலாத்துறையின் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்துடன்

