இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி

0

 


இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 140 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 290 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணிசார்பில் பெத்தும் நிஸ்ஸங்க 66 ஓட்டங்களையும்,குசல் மெண்டிஸ் 54 ஓட்டங்களையும், ஜனித் லியனகே 53 ஓட்டங்களையும் அதிகபட்டசமாக பெற்றுக்கொண்டனர்.

291 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 29.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 150 ஓட்டங்களை பெற்று தோல்வியைத் தழுவியது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top