நாகரிகச் செழுமையும் வரலாற்றுப் பெருமையும் மிகுந்த ஷாம் 12

Dsa
0

 



 கலாநிதி. றவூப்ஸெய்ன்


2011 சிரியாவில் ஆரம்பித்த அறபு வசந்தம்


2011 மார்ச் 15 இல் பஷர் அல் அஸதுக்கெதிரான மக்கள் புரட்சி சிரியாவில் களை கட்டியது. தசாப்தங்களாக உணவுக்காக மட்டும் வாயைத்திறந்த மக்கள் இப்போது சுதந்திரம் சுதந்திரம் என்று கோஷமிட ஆரம்பித்தனர். நாட்டை நுஸைரிய இராணுவக்கொடுங்கோலர்களிடமிருந்து மீட்போம் என்ற வெறியோடு  வீதிக்கு இறங்கினர். அவர்கள் தரப்பில் ஆயிரம் நியாயங்கள் இருந்தன.


01 அவசரகாலச் சட்டம்


பொங்கி எழுபவர்களையும் எகிறி எழுபவர்களையும் விமர்சிப்பவர்களையும் அரசியல் எதிராளி களையும் கசக்கிக்குப்பையில் போடும் விதமாக அவசரகாலச் சட்டம் பல அறபு நாடுகளில் அமுலில் இருக்கிறது. சிரியாவிலும் இருந்தது. அங்கு அது 50 ஆண்டுகாலமாக அமுலில் இருந்தது. மாற்றுப் பார்வை கொண்டோரின் குரல்வளையை நசுக்கவும் மூச்சை நிறுத்தவும் இறுக்கிப்பிடுத்து சிறையில் வீசவும் இந்தச்சட்டம் அதிகார வர்க்கத்திற்குப் பயன்பட்டது.மக்களை மந்தைக்கூட்டமாக கட்டுப்படுத்த கையில் எடுக்கப்பட்ட கடிவாளம் இது. இதற்கு மேல் இதனைச் சகிக்க முடியாது என்ற நிலைக்கு மக்கள் வந்தனர்.


02. பெருக்கெடுத்த அரசியல் கைதிகள்


அரசியல் ரீதியாக எதிராளிகள் மீது கட்டவிழக்கப்பட்ட வன்கொடுமைகள் சொல்லில் மாழாதவை.Ammesty international .human rights watch . Asian human rights organisation என்பவற்றின் கணிப்பில் சிரியாவின் ஒடுங்கிய இருண்ட சிறைகளில் அடைக்கப்பட்ட அரசியல் கைதிகளின் தொகை சுமார் பத்தாயிரம். இந்தக்கைதிகளில் இஸ்லாமிய அறிஞர்கள் சிந்தனையாளர்கள் அரசியல் செயற்பாட்டாளர்கள் சமூக மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்.அடங்குவர். அவர்களது சிறைச்சாலை மரணமும் சித்திரவதைகளும் மக்களை கொதிநிலைக்குக் கொண்டு சென்றது.


03 யதேச்சதிகார ஆட்சி


ஜனநாயகம் மண்ணளவும் இல்லாத சர்வதிகாரிகாரம் அரை நூற்றாண்டாக தலைவிரித்தாடிய தாண்டவம் மக்களை பொங்கி எழ வைத்தது. எங்கும் அரச உளவாளிகள். அரசின் கண்ணில் படாமல் எதுவும் நிகழாது என்ற வண்ணம் மக்கள் மீது நிழல் போல் தொடர்ந்த அரச கண்காணிப்பும் விசாரணையும் கட்டுப்பாடுகளும் மட்டுப்பாடாகளும் மக்களை மனம்புழுங்க வைத்தது. ஒரு ஊடகத்திற்கு பேட்டியளிப்பதிலிருந்து பத்திரிகைக்கு கட்டுரை எழுதும் வரை அத்தனையும் அரச கண்காணிப்புக்கு உட்பட்டது. சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்கி எறிய எத்துணை அரச இயந்திரம்!


தொடரும்

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top