பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள தேசிய தொலைக்காட்சி தலைமையகத்திற்கு தீ வைத்தனர்.
வன்முறைப் போக்கை வெளிப்படுத்திய போராட்டக்காரர்கள் தொலைக்காட்சி வளாகத்திற்குள் நுழைந்து பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களைத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தேசிய தொலைக்காட்சிக்குச் சொந்தமான கட்டடம் தீப்பிடித்ததில், ஏராளமானோர் அதற்குள் சிக்கிக் கொண்டனர். தீயை அணைக்கவும், மக்களை மீட்கவும் தீயணைப்பு வீரர்கள் மிகுந்த சிரமப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
