அண்மையில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 2024 செப்டெம்பர் மாதம் வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தயாராக இருப்பதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (23) ஹோமாகமவில் வைத்து ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
அத்தோடு, இம்முறை விடைத்தாள் திருத்துபவர்களுக்கான கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
