திருமணத்திற்கான பணத்தை தேட இளைஞர் செய்த செயல்: பின்னணியில் சிக்கிய தாய்

Dsa
0

 



கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தாயும், மகனும் ஜா -எல பொலிஸ் நிலைய குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஓபத்த கொட்டுகொட பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞரும் அவருக்கு உறுதுணையாக இருந்த தாயாருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த இளைஞருக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு 15 இலட்சம் ரூபா பணம் தேவைப்படுவதாகவும், அதனை பெற்றுக்கொள்ள தனது தந்தையிடமிருந்து 5 இலட்சம் ரூபாவை பெற்று கஞ்சாவை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 


இவ்வாறு வாங்கிய கஞ்சாவை தனது தாயின் உதவியுடன் சிறிய அளவில் விற்பனை செய்து வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.


சந்தேகநபர்கள் கைது செய்யப்படும் போது அவர்களிடமிருந்து 2 கிலோ 170 கிராம் கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top