ஸெய்ன்ஸித்தீக்
சம்மாந்துறை வலையத்திலுள்ள இறக்காமம் கல்வி கோட்டப் பாடசாலையான கமு/சது/ அல்-அஷ்றப் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) இல் தரம் 8ல் கல்வி கற்கும் மாணவன் எம்.கே. யூசுப் ஸயான் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை தேசிய மட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளார். இவ்வெற்றி இப்பாடசாலைக்கும் இறக்காமத்திற்கும் கிடைத்த ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது.
செல்வன் யூசுப் ஸயான் எஸ்.எல்.எம். குத்தூஸ் ஆசிரியர், எஸ்.எல். பஸ்மியா ஆசிரியை ஆகியோரின் சிரேஷ்ட புதல்வருமாவார்.