S.M.Z. சித்தீக்
வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும் மட்டக்களப்பில் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திலிருந்து எதிர்வரும் 30 ஆம் திகதி 08.30 மணியளவில் பேரணி ஆரம்பமாகி மட்டக்களப்பு காந்தி பூங்கா அருகிலுள்ள , படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத் தூபியருகில் நிறைவு பெற்றதும் அங்கு நீதி கோரிய போராட்டம் முன்னெடுக்கப்படும்.
வலிந்து காணாமல் ஆக்கப் பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்துக்கு சிவில் சமூக அமைப்புகள் , பொது அமைப்புகள், பல்கலைக்கழக மாணவ அமைப்புகள் , தமிழ் தேசிய பரப்பிலுள்ள அரசியல் கட்சிகள், ஆதரவு தெரிவித்துள்ளன. வடக்கு கிழக்கில் தமது உறவுகளுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்படும்.
போராட்டத்துக்கு தமிழ் தேசியப் பரப்பிலுள்ள அனைத்து தரப்பினரையும் ஒன்றிணையுமாறு மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளின் சங்கத் தலைவி அ.அமலநாயகி வேண்டுகோள் விடுத்துள்ளார் .
