நௌபீர் ஆதம் லெவ்வை
இறக்காமத்தின் மூத்த ஊடகவியலாளர், அதிபர், ஆசிரியர், சமூக ஆர்வலர் மரஹும் எஸ்எல்எம். பிக்கீர் அவர்களின் ஒரு வருட நினைவாக. அடியேனின் ஞாபகச் சுவரில் இருந்து.
இறக்காமத்தின் வரலாற்றை நேர்மையாக நோக்கும் யாரும் கல்வி மறு மலர்ச்சிக் காலம் என்றொன்றைச் சொல்வார்கள். அந்தக் காலம் தொடங்கிய 1980 களில் இளைஞர்களாக இருந்தவர்கள் பலருண்டு. அதிலொருவரே #மர்ஹும்_ஊடகவியலாளர் #பிக்கீர் அவர்கள்.
மூடிய ஒரு சமூகத்தை (closed society) வெளியிலே எடுப்பதற்கு #கல்வி_ஊடகம் என்ற துறைசார் பங்களிப்புத் தளங்களுடன் நேரடியாக தொடர்பு பட்டவர் இவர் எனலாம். ஓர் இளைஞர் சேவை அதிகாரியாக, ஓர் ஆசிரியராக, ஓர் ஊடகவியலாளராக எனப் பல பரினாமங்களைக் கொண்டிருந்தாலும் தனித் தனியாக இவரை ஒவ்வொரு துறைக்குள்ளாக வேறு பிரித்து நோக்குதல் கடினம். ஒரு துறையல்லாமல் (section) ஒரு பூரண மனிதனாகவே (whole person) நமக்குள் ஒன்றாகி நம்மோடு வாழ்ந்தார்.
இந்த மண்ணை இவரைப் போல் நேசித்தவர்களை நாம் இதற்கு முன்னர் கண்டதில்லை. பிரதேச செயலகம், பிரதேச சபை, பாடசாலைகள், சமூக நிறுவனங்கள் என நமக்கெல்லாம் அழகு வனப்புச் சேர்க்கும் வில்லுக் குளம், கரும்புக் காணிகள் எனப் பலதையும் புகுந்து புரட்டிப் போட்டதில் அவருக்கு நிகர் அவரே.
பிந்திய நாட்களில் இந்த மண்ணின் பலரும் பல துறைகளுக்குச் சென்று சாதிக்கவும், உலகின் பல பாகங்களுக்கும் நமது மாணவர்கள் பரவலடைந்து வாழவும் இந்த ஊரிலே இருந்து கொண்டு #ஏணியாக* செயற்பட்டு அழகு பார்த்தவரே மர்ஹும் பிக்கீர் என்ற மாமனிதர் ஆவர்.
இறக்காமம் என்ற கிராமியக் கலாசாரத்தில் வாழ்ந்தாலும் இவரின் எல்லா செயற்பாடுகளுமே உலகளாவியதாகவே (universal) இருந்தது. அதற்கான சான்றே அவரின் மரணத்திற்கு ஒன்று கூடிய பல தரப்பட்ட மக்கள் வெள்ளமும், ஊடகச் செய்திகளும். இந்த மண்ணைப் புதுமையை நோக்கி எப்போதுமே முன் நகர்த்திய பெருமை இவருக்கு உரியது.
சம காலத்தில் இறக்காமத்தில் ஒரு நல்ல கட்டமைப்புச் சூழல் (organizational climate) எதிலும் உருவாக உழைத்தவர் இவரே. அதற்கான #விரிவு_சிந்தனை (divergent thinking) மர்ஹும் பிக்கீர்* அவர்களிடம் நிறைந்து கிடந்தது. நமக்குள் எத்தனையோ பேர் மரணித்துப் போனார்கள். அவர்களுள் ஒரு பொதுமையாக (general) வாழ்ந்து மரணித்தவராக இவரே உள்ளார். மட்டுமல்ல எல்லைக் கிராம சிங்கள சமூகத்தோடும் எப்போதுமே நல்லதொரு சமூக ஊடாட்டத்தைக் (interaction) கொண்டவராகத் திகழ்ந்து சிங்கள மொழிப் புலமையையும் கொண்டு விளங்கினார்.
எல்லாவற்றையும் கடந்து ஒரு நல்ல மேடை நாடக கலைஞனாகவும், ஆசியக்காரனாகவும் நமக்குள் வாழ்ந்தார். இவர் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக்கு முதலாமாண்டு மாணவனாக நுளைந்த போது பகிடிவதைக்கு வந்த சிரேஷ்ட மாணவர்களிடம் யானையை உனக்குத் தெரியுமா? எங்கே கண்டாய்? என்று கேட்ட போது #ஆம், நான் நெருப்பெட்டியிலே தான் யானையைக் கண்டிருக்கிறேன் " #என்று ஆசியமாகப் பதிலளித்து சிரிப்பொலியை வரவளைத்தார். (அந்த நேரத்தில் யானை மார்க் தீப் பெட்டிகள் பிரபல்யமாக இருந்துள்ளது) இவ்வாறு ஆயிரம் கதைகளுண்டு அவரிடம்.
எப்போதுமே இவரின் உடனாளர்களிடம் (peers) இவர் ஓர் ஆசியக்காரர் என்றே போற்றப் பட்டார். கவலை மறப்பதற்காகவும், சிரிப்பதற்காகவும் என்றே ஊரிலுள்ள பலரும் இவரைத் தேடிச் சென்று உறவாடுவார்கள். இவர் யாருடயதையும் அபகரித்து ஒரு போதுமே வாழ்ந்தவரல்ல. ஊரிலே நடந்தேறிய, வெளி வந்த சமூக கலாசார பாராட்டு விழாக்களில் இவரைச் சேர்க்காமல் நடாத்துவதோ, ஞாபக மலரை வெளியிடுவதோ இவர் வாழ்ந்த காலத்தில் இல்லை.
இவரைப் பற்றி எழுதக் கூடிய எத்துணை எழுத்தாளுமை (write ability) வந்தாலும் அந்த ஆளுமை இவரை எழுதுவதில் தோற்றுப் போய் விடும். நானும் கூட.
அவருக்கான வல்ல அள்ளாஹ்விடம் இரஞ்சியவனாக