நோயுடன் கடும் போராட்டம்? - IVIG ஊசி போட்டுக் கொண்ட சமந்தா

0

 


நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் போராடி வரும் நிலையில் அவர் IVIG ஊசி போட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நோயால் அவதி 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த சில நாட்களாக மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

actress-samantha-with-injections

இதையடுத்து சமந்தா தனது உடல் நலத்தில் கவனம் செலுத்தவும், முழுமையாக குணமடையும் வரை படங்களில் இருந்து நீண்ட இடைவெளி எடுக்க முடிவு செய்துள்ளார் என்ற செய்தி அண்மையில் தீயாக பரவியது.

அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திரைப்படங்களில் நடிப்பது மற்றும் உடற்பயிற்சி செய்வது உள்ளிட்டவற்றில் ஆர்வம் காட்டி வருகிறார்.

ஊசி எடுத்துக் கொண்ட சமந்தா?

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்,வீட்டில் மயோசிடிஸ் சிகிச்சையை மேற்கொள்ளும் போது தனது நண்பர்கள் ராகுல் ரவீந்திரன் மற்றும் நந்து ரெட்டி ஆகியோரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

மேலும் அந்த பதிவில், மயோசிடிஸ் சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஆன்டிபாடிகளுக்கான IVIG ஊசிகளை எடுத்துக்கொள்வதாகவும், புதிய இயல்பான நிலை என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதற்கிடையில் இப்போது அவர் நடித்த சகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top