துருக்கியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29,000ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துருக்கியில் 24,617 ஆகவும் சிரியாவில் 4,500 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
நிலநடுத்தின் பிறகு சிரியாவில் 5.3 மில்லியன் மக்கள் வீடற்றவர்களாக இருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது.

அதே நேரத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் கிட்டத்தட்ட 900,000 மக்களுக்கு சூடான உணவு அவசரமாகத் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சிரிய அரசாங்கம், தமது கட்டுப்பாட்டிற்கு வெளியே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

