கத்தார் உலகக் கோப்பை மைதானத்தில் உயிரிழந்த பிரபல நபர்! அதிர்ச்சியில் மனைவி

0

 கத்தார் உலகக் கோப்பை போட்டியின் போது பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் மைதானத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிக்கையாளர் மரணம்

அமெரிக்க பத்திரிக்கையாளரான கிராண்ட் வஹி (48) நேற்று முன் தினம் நடைபெற்ற அர்ஜென்டினா - நெதர்லாந்து போட்டியின் போது லுசைல் மைதானத்தில் தனது பணியை செய்து கொண்டு இருந்தார்.

அப்போது கிராண்ட் திடீரென கீழே சுருண்டு விழுந்தார், இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

கத்தார் உலகக் கோப்பை மைதானத்தில் உயிரிழந்த பிரபல நபர்! அதிர்ச்சியில் மனைவி | Qatar Fifa Worldcup Grant Wahl Celine Gounder

GRANT WAHL/INSTAGRAM

மனைவி தமிழ் வம்சாவளி பெண்

அவர் இறப்புக்கு காரணம் மாரடைப்பு என தெரியவந்துள்ளது. கிராண் மரண தகவல் அவரின் மனைவி செலின் கவுன்டரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. செலின் பிரஞ்ச் தாய்க்கும், இந்திய தந்தைக்கும் பிறந்தவர் ஆவார், அதன்படி செலின் தந்தை தமிழர் ஆவார், அவரின் ஊர் தமிழகத்தின் ஈரோட்டில் உள்ள கிராமமாகும்.

அவரின் டுவிட்டர் பதிவில், நான் முழுமையான அதிர்ச்சியில் இருக்கிறேன். என் கணவரின் கால்பந்து குழு குடும்பத்தின் ஆதரவுக்கு மிகவும் நன்றியுள்ளவராக இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top