டுடே சிலோன் ஊடக வலையமைப்பின் முகநூல் தொலைக்காட்சி அங்குராட்பணம்

0


 இறக்காமம் பிரதேசத்தில் இருந்து இயங்கிவரும் இணைய ஊடக வலையமைப்பான டுடே சிலோன் தனது முகநூல் TV இனை சர்வமத தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் நேற்று அங்குராட்பணம் செய்தது.


டுடோ  சிலோன் ஊடக வலையமைப்பின் சீருடை அறிமுகமும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும்  சாதனையாளர்கள் பாராட்டும் ஊடக வலையமைப்பின் ஸ்தாபக பணிப்பாளர் தேசமானிய தேச கீர்த்தி எஸ்.எம். சன்சீர் தலைமையில் இறக்காமம் பிரதேச சபை கூட்டமண்டபத்தில் நடைபெற்றது. 








சாதாரண தர பெறுபேற்றின் அடிப்படையில் 09 ஏ சித்திகளை பெற்ற இறக்காமம் அஸ்ரப் மத்திய கல்லூரி மாணவியான நளீம் பாதிமா நுஹா இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டதுடன் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இந்நிகழ்வில் வைத்து வழங்கப்பட்டது.



 இந்நிகழ்வின் போது  டுடே சிலோன் ஊடக வலையமைப்பின் உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ அடையாள அட்டை வழங்கி வைக்கப்பட்டன் பிரதம அதீதிகளுக்கும் அவர்களை கௌறவபடுத்துமாக நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌறவிக்கப்பட்டனர்.





இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ்  கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக வடமாகாண இளைஞர் சேவை பணிப்பாளரும், இளைஞர் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரியுமான ஏ. அமீர், இறக்காமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கோட்டக்கல்வி அதிகாரி, ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.










Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top