கணவன் மனைவி உட்பட ஒரே நாளில் மூவர் கொலை-வெளியான அதிர்ச்சி தகவல்!

0


 கொழும்பு – மாளிகாவத்தை மற்றும் கொகரெல்ல பொலிஸ் பிரிவுகளில் நேற்று இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயந்த வீரசேகர மாவத்தையில் நேற்று மாலை 44 வயதுடைய நபர் ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார்.

கணவன் மனைவி உட்பட ஒரே நாளில் மூவர் கொலை | Three People Killed In One Day

 

குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் (CNH) அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். 118 அவசர நிலையத்திற்கு கிடைத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கணவன் மனைவி கொலை

 

இதேவேளை, கொகரெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெகம பகுதியில் 49 வயதுடைய பெண் ஒருவர் நேற்று இரவு கூரிய பொருளால் குத்தி கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கணவன் மனைவி உட்பட ஒரே நாளில் மூவர் கொலை | Three People Killed In One Day

 

பெண்ணின் கணவரே கூரிய ஆயுதத்தினால் அவரைக் கொன்றதாகவும், கணவரும்  பலத்த வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொல்லப்பட்ட மனைவியின் அருகாமையில் கணவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொகரெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top