எரிவாயுவின் விலை குறைகிறது! லிட்ரோ நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு

0

 அடுத்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் எரிவாயு விலை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து  கொண்டு கருத்து வெளியிடும்போது லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் இதனை குறிப்பிட்டுள்ளார். 

உலக சந்தையில் ஏற்படும் விலை மாற்றங்களுக்கு ஏற்ப இவ்வாறு லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

எரிவாயு விலை அதிகரிப்பு

எரிவாயுவின் விலை குறைகிறது! லிட்ரோ நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு | The Price Of Litro Gas Is Decreasing

இதேவேளை, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் எரிவாயுவின் விலையை லிட்ரோ நிறுவனம் அதிகரித்திருந்தது. 

இதன்படி, இதன்படி, 12.5 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது.

அத்துடன், 5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 100 ரூபாவினாலும், 2.3 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை 45 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டது.

விலை அதிகரிப்பிற்கமைய, 12.5 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 4610 ரூபாவாகும்.

5 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 1850 ரூபாவாகும்.

மேலும், புதிய விலை திருத்தத்திற்கு அமைய 2.3 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 860 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top