பீஸ்ட் படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில்’ தளபதி 66' படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. இந்தப்படத்தில் விஜய்யின் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்
இந்தப்படத்தின் ‘வாரிசு’ தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு குடும்ப சென்டிமென்ட் கதையம்சம் கொண்ட படத்தில் நடித்து வருகிறார் விஜய்.
வாரிசு’ படத்தினை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த நிலையில் தற்போது எண்ணூரில் நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் சரத்குமார், பிரபு, ஷாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகின்றனர்.
வாரிசு' படத்தினை தொடர்ந்து 'தளபதி 67' படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். 'மாஸ்டர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். 'வாரிசு' படமும், அஜித்தின் 'துணிவு' படமும் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

