உள்ளூராட்சிமன்றங்களின் சேவைகளை இலகுபடுத்தி மக்களின் சகவாழ்வை மேம்படுத்தும் வேலைத்திட்டம் இறக்காமம் பிரதேசபையில் ஆரம்பம்.

0

 


(இறக்காமம் நிருபர்)


நாட்டில் நல்லிணக்கம், சகவாழ்வு, சமாதானம், ஐக்கியம் ஆகியவற்றை ஏற்படுத்தும் முகமாக அனைவருக்குமான உரிமைகளும் சேவைகளும் உறுதிப்படுத்தப்பட்டு மதிக்கப்படுதல் வேண்டும். 


இதனடிப்படையில், FSLGA மற்றும் ACTED நிறுவனமும் இணைந்து செயற்படுத்தும் "சகவாழ்வின் ஊடாக சமூகத்திற்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தல்" எனும் செயலமர்வு இறக்காமம் பிரதேச சபையில் தவிசாளர் எம்.எஸ்.ஜமீல் காரியப்பர் தலைமையில்  அன்மையில் இடம்பெற்றது.


பிரதேச சபையின் செயலாளர் ஏ.எம்.எம்.இர்பான் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,


FSLGA சிரேஷ்ட முகாமையாளர் திரு. பிரதீப், ACTED நிறுவனத்தின் நிகழ்ச்சிதிட்ட உத்தியோகத்திர் திரு செஷான், FSLGA நிகழ்ச்சிதிட்ட உதவியாளர் திரு. டில்ஷான் ஆகியோர் நிகழ்வை வழிநடாத்தி சென்றனர்.


அண்மைக்காலமாக நாட்டில் இடம்பெற்ற இனவெறுப்பு செயற்பாடுகளின் பின்னர் தேசிய ஒருமைப்பாட்டின் அவசியம் உணரப்பட்டாலும், நமது நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் நம்பிக்கையும் புரிந்துணர்வும் இதுவரையில் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.


நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அதற்கான வேலைத் திட்டம் முதலில் மக்களின் நேரடி பங்கேற்பில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை மக்களுக்கு இலகுபடுத்துவதன் ஊடாகவே சகவாழ்வை உறுதிப்படுத்க முடியும்.


மேலும் இந்நிகழ்வில் பிரதே சபை உறுப்பினர் கௌரவ எம்.எல்.சுல்பிகார் உட்பட பிரதேச சபை சகவாழ்வு மன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துசிறப்பித்தனர்.








Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top