#தனுஷ்கவுக்கு #நீதிமன்றமும்_பிணை #மறுப்பு

0




 இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவின் பிணைக் கோரிக்கையினை அவுஸ்திரேலியா நீதிமன்றம் நிராகரித்துள்ளது.


இதனையடுத்து அவர் தொடர்ந்தும் அவர் காவல்துறை தடுப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


தனுஷ்க குணதிலக்க மீது 4 பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக கைவிலங்குடன் சிட்னி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.


இதன்போது தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக மாத்திரம் தனுஷ்க குணதிலக்க நீதின்றில் பேசியதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்தநிலையில், அவர் ஒரு வெளிநாட்டுப் பிரஜை என்பதால், அவரது பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து, அவர் தொடர்ந்தும் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


நேற்றைய தினம் காவல்துறையும் அவருக்கு பிணை வழங்க மறுப்பு தெரிவித்திருந்தது


எவ்வாறாயினும், அவர் ஒரு திருத்தம் மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top